Tuesday, November 22, 2011

மாறிய காலங்கள்

பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது
மழையில் நனைந்து செருப்பினை கப்பலாக மாற்றிவிளையாடிய காலங்கள்.
இன்று
மழையில் நனையவே பயமாக உள்ளது
“எவனாவது குழி பறித்து வைத்திருந்தால்”??????”

ஆசை” மிட்டாய் இருந்தாலும்
அன்புடன் தந்த நாட்கள் சென்றுபேருக்காக மட்டும்
“Snickers” “Mars” என்று விலைஉயர்ந்த மிட்டாய்கள் குடுத்து
ஏமாற்றும் காலம் இப்பொழுது.

அன்னை மடியில் தூங்கிய காலங்கள் எங்கே?
தகப்பனுடன் விளையாடிய காலங்கள் எங்கே????

கில்லி, கோலி, கபடி, நொண்டி, பரமபதம் விளையாடிய கரங்கள்
“GTA” “Assasins creed” “Prince of Persia” என்று கணினியை தட்டுகின்றது

நட்புடன் கூடிய கால்கள் எங்கே???
நண்பர்கள் பலர் இருந்தும் நட்பினை பற்றி தெரியாதிருந்தும்
ஒன்றாக இருந்த காலம் எங்கே????
நட்பினை பற்றி தெரிந்து நட்பின் அன்புக்காக ஏங்கும்
உள்ளங்கள் மட்டுமே இங்கே.

இருசக்கர மிதிவண்டியில் சென்ற நாட்கள்.
வண்டியின் முன் ஒரு நண்பனும்பின் ஒரு நண்பனும்
மூன்று பேராக சென்ற காலங்கள் எங்கே????
வெறும் நோய்களை சுமந்து செல்பவர்களாக
மாறிவிட்ட நாம் மட்டும் இங்கே.

இன்னும் அதிகம் உண்டு தோழா
ஆனால் நீ இப்பொழுது நடக்கும் திசையில்
கொஞ்சம் கணினி நாகரீகத்தை அகற்றிவிட்டு
உன் நினைவுகளை மீண்டும் எழ செய்தால்
என்றும் சந்தோஷம் நிச்சயமே.