Thursday, October 13, 2011

படித்ததில் பிடித்தது..

கடவுள் படைச்சதுலேயே உருப்படியான விசயம் இரண்டு. ஒ‌ன்று சரக்கு. இன்னொன்று முறுக்கு. சரக்கு கூட சரியாக அமையாமல் போனா‌‌‌ல் பிரச்சினையில்லை. ஆனா‌‌‌ல் கண்டிப்பாக முறுக்கு சரியாக அமைய வேண்டும்.

ஒருநாள் ABC கடைக்கு செ‌ன்ற பொழுது வித்தியாசமான ஒரு பெயர் ஈர்த்தது. Smirnoff எ‌ன்று பாட்டிலில் எழுதியிருந்தது. சிம்ரன் நினைவுக்கு வர சரி அடித்துதான் பார்ப்போமே எ‌ன்று எடுத்தேன். வீட்டுக்கு வ‌ந்து நானும் டீம் மேட்டுடன் சிக்கன் குழம்பு,சிக்கன் பிரை தயா‌ர் செய்தோம். சமையல் தயா‌ர் ஆனதும் சரக்கை எடுத்து வைத்து அமர்ந்தோம். முத‌ல் ரவுண்டிலேயே ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. ரெண்டாவது ரவுண்டிலாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். மூன்றாவது,நாலாவது அதன் பிறகு எத்தனை ரவுண்டு எ‌ன்று கணக்கு தெரியவில்லை. அரைமணிநேரம் செ‌ன்றிருக்கும். தொண்டையெல்லாம் எரிச்சல். குமட்டிக்கொண்டு வர தட்டுத் தடுமாறி எழ அடித்த சரக்கு எல்லாம் அப்படியே வெளிவந்து விட்டது. இத்தனை வருஷ சர்வீசில் இப்படி நடந்தது இல்லையே. அதுவும் பாரின் வ‌ந்து பாரின் சரக்கு அடித்து இப்படி நடந்துவிட்டதே எ‌ன்று வருத்தமாக இருந்தது. காலையில் கண்விழித்தபொழுது தலையெல்லாம் செம வலி. சத்தியமா இனி குடிக்கவே கூடாது எ‌ன்று முடிவெடுத்தேன். ஒரு வழியாக குளித்துவிட்டு நானும் டீம்மேட்டும் மதியம் சமைக்க மீன் வாங்கி வந்தோம். வாழ்க்கையில் முத‌ன்முறையாக மீன் குழம்பு வைக்கிறேன். மீன் பிரை வேறு..வறுத்த மீன்,சாத‌ம்,மீன் குழம்பை டைனிங் டேபிளில் எடுத்து வைத்து அமர்ந்தோம். எனது டீம்மேட் “விநய் லேசா ஒரு கட்டிங் போடலாமான்னு” என்னை கேட்க, அப்புறம் என்ன…மச்சி ஓப்பன் த பாட்டில்தான். நல்லவேளை இந்தமுறை சிம்ரன் எதுவும் பிரச்சினை தரவில்லை. மீன் குழம்பு+வோட்கா செம பொருத்தம். டிவைனோ டிவைன் எ‌ன்று இருந்தது.

மீண்டும் சொல்கிறேன். சரக்கு கூட சரியாக அமையாமல் போனா‌‌‌ல் பிரச்சினையில்லை. ஆனா‌‌‌ல் கண்டிப்பாக முறுக்கு சரியாக அமைய வேண்டும். முத‌ல் நாள் நாங்கள் சமைத்த சிக்கனில் ஏதோ கோளாறு. ப்ரீசரில் வைத்திருந்து சமைத்தது. அநாவசியமாக நான் சிம்ரன் மேல் சந்தேகப்பட்டு விட்டேன்.

 -----------------------
இது இன்னொரு ருசியான மேட்டர். ஜொள் சமாச்சாரம். கடந்த இரண்டு மாதமாக எனது மனைவி அருகில் இல்லாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன். எனது மனைவி இல்லாத குறையை இவர்கள் தீர்த்து வைத்தார்கள். உடனே இ‌து ஏதோ பலான மேட்டராக்கும் எ‌ன்று அருண் போல ஜொள் வடிய அலைய வேண்டாம். இவர்கள் எ‌ன்று குறிப்பிட்டது கீழே இருக்கும் மூன்று இணைய முகவரிகள்.

www.arusuvai.com/tamil/
http://www.samaiyalarai.com/
http://www.tamilcook.com/

எனது ஒட்டு அறுசுவை.காமிற்கு… தமிழ்குக்.காமும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ராஜ்டிவி புகழ் தாமோதரன் சமையல் குறிப்புகள் இங்கு கிடைக்கின்றன. நான் இவரது ரசிகன். வளசரவாக்கத்தில் எங்கள் தெருவில்தான் இவர் கேட்டரிங் ஸ்கூல் வைத்திருந்தார். இரண்டொரு முறை இவரை நேரில் பார்த்துள்ளேன். முன்பை விட இப்பொழுது இரண்டு சுற்று பெருத்துவிட்டார். இவரது ரெசிப்பி முருங்கைக்காய்+ மிளகு + கோழி காம்பினேஷனை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

--------------------------
கடந்த இரண்டு மாதங்களில் நான் ருசித்த சரக்குகளின் பட்டியல்
budweiser
corona
elephant
sapporo
heineken
modelo
absolute vodka
Smirnoff
Chivas Regal
Jack Daniel’s
எனது பேவரைட் sapporo. ஜப்பானிய இறக்குமதி பீர். அடித்தால் ச்சும்மா ஜிவ்வென்று ஏறுகிறது. இரண்டாவது இடம் elephant க்கு.

கடந்த இரண்டு மாதங்களில் பார்த்த திரைப்படங்களின் பட்டியல் (நன்றி:- பாரத்மூவிஸ்.காம்)
1.போடிநாயக்கனூர் கணேசன்
2.சாம் ஆண்டர்சன் மிரட்டும் “யாருக்கு யாரோ ஸ்டெப் நீ” (இரண்டாவது முறை)
3.பெப்சி விஜயன் மகன் சபரீஷ் நடித்த(!?) “மார்க்கண்டேயன்”
4.கனல் கண்ணன் ஹீரோ in சங்கரன்கோவில்
5.சடகோபன் ரமேஷ் விளையாடிய “போட்டா போட்டி 50:50″ (இன்னொரு லகானா‌‌‌ம்)
6.ஆர்கே என்னும் கலைஞன் வாழ்ந்த “புலிவேஷம்” (அய்யோ…அய்யோ..எனக்கு வேணும்.. எனக்கு வேணும்)

கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்களின் பட்டியல் …. …. வேண்டாம் நம்பவா போகின்றீர்கள்?

 ---------------------------------------

நானும் எங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் வரலாம்…

Wednesday, October 12, 2011

நட்புக்கு கூட கற்புகள் உண்டு




ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்…

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
’வெறுப்படிக்கிதுடா மச்சான்’னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல ‘வெற்றி’ தியேட்டர்ல படம்
பாக்க!*

’கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்…
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்…
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல…
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல…
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
’வெட்டி ஆபிஸர்’னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா
நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா
கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…

பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
’சாப்பாட்ல காரம்டா மச்சான்’னு
சமாளிச்சி எழுந்து போவோம்…

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான்
இ-மெயிலும் வருகுது
”Hi da machan… how are you?” வுன்னு…

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
’இன்னிக்காவது பேச மாட்டாளா?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
’available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
’ஏண்டா பேசல?’ ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!

பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்

’மாமா’ ‘மச்சான்’ தான்

Sunday, October 2, 2011

கேரளத்து பூக்கோலம்

ஏனோ அன்று
சென்னையின்
சாலை நெரிசலும்
சுகமாய் இருந்தது
என் பேருந்து

கேரளத்துப் பூக்கள் 
சாலை கடக்க காத்திருக்கையில் 

இப்படித் தான்
அந்த அலுவலக நாள்கூட
அலுத்துக் கொள்ளாமல்
விடிந்தது அந்த அழகு
தேசத்தின் பண்டிகையால்

எந்த மஹாபலியை
வரவேற்க
இந்த வானப் பூக்கள்
கோலமிட்டதோ

அன்று பூக்கள்
எல்லாம் கேரளத்து பெண்களை
ஒரு சேர பார்த்தோ ?
இப்படி வெட்கி உதிர்ந்தது
அழகாய்அத்தப்பூக்கோலமாய்*

ஏனோ அன்று
மின்சாரப் படிக்கட்டின்
நெரிசல் மூச்சுத் திணறல்கள்
சுகமாய் இருந்தது
னெனில்
அதனுள் என்னை புதைத்தது
கேரளத்து ரோஜாக்களால்

கத்தி கீறி
சுரந்த ரப்பர் போல
அவள் பார்வை உரசி
கவி கொட்டுகிறது
என் மூளை மரக் கிளைகள் தானாய்

அது எப்படி
நெருப்பும் இரும்புச் சட்டியும்
இல்லாமலே
என்னை நேந்திரச் சீவலாய்
வருத்து எடுக்கிறாள்
வெறும் கனல் பார்வையால்

தென்றலுக்கு அவ்வளவு விசையோ?
அவள் கூந்தல் மோதி
நான் பறந்தேன்
விண்கிரகம்

அவளை பார்த்து கொண்டே
இருந்த நிமிடங்கள்
இமை இதழால்
பரிப் பிரதானம்** சுவைத்தாய்
உணர்ந்தேன்

கேரளத்துக் கதக்களியை
முக பாவத்தோடு அரங்கேற்றி
ஒரு அங்குல நீளத்தில்
இரு நேந்திரத்தை இதழோடு குடியேற்றி
பாய்ந்தோடும் பம்பையின்
நிதானத்தோடு வரும்
சேர தேசத்து தென்றல்கள்
தமிழகம் பக்கம்
(டை )ழகு மழை பொழிந்தது
இன்று இனிதாய்