Sunday, January 2, 2011

ஜாதீ!!!

எனக்கு தெரிஞ்சு உலக நாடுகள் அனைத்திலும் இரண்டே பிரிவினைகள் உள்ளன. அது கறுப்பினர் மற்றும் வெள்ளையினர். அந்த பிரிவினைக்கு எதிராக எத்தனை எத்தனை போராட்டங்கள் மற்றும் சட்ட திட்டங்கள். ஆனாலும் இன்றளவும் இனச்சண்டைகள், மதச்சண்டைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மொத்த ஜாதிகளின் எண்ணிக்கை மட்டும் 3,743 ஆக இருந்தது 1980 ம் ஆண்டு கணக்கெடுப்பில். இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 364 ஆக இருந்தது 2005 ம் கணக்கெடுப்பில். இவற்றில் பல ஜாதிகள் அழிந்து விட்டன, சிலவற்றில் 2 முதல் 8 பேர் மட்டுமே உள்ளனர்.

ஜாதி பிரிவினை தோன்றிய வரலாறு - அவரவர் செய்த தொழிலை அடிப்படையாக கொண்டு பிரிவினைகள் வகுத்தனர் முன்னோர்கள். அதன் காரணமே பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்பதற்காக. ஆனால் நாளடைவில் அதை திரித்து, சில தனி நபர்களின் சுயநலத்திற்காக அந்த பிரிவினைகளை பயன்படுத்தினர். அந்த வழக்கம் இன்று முதல் தொடர்வது தான் மக்களின் அறியாமையின் உச்ச கட்டம். சில அரசியல்வாதிகள் கூட ஜாதி அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த 21 ம் நூற்றாண்டிலும், கணினி யுகத்திலும் கூட இந்த அவலம் நடப்பது தான் வேதனை அளிக்கிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இன்றும் சாதிச்சான்றிதல் கேட்கும் நிலை தொடர்கிறது. ஆனால் அதுவும் கூட scholarship வழங்க. இருந்தாலும் அரசு OC, BC, OBC, SC/ST மட்டும் தெரியபடுத்தினால் போதுமென்று அறிவித்திருந்தாலும் நடைமுறை படுத்த முடியாத நிலை. அட இன்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் என்ன caste னு மறைமுகமா கேட்கும் போது எரிச்சல் வருகிறது.ஒருவரின் சாதியை அறிந்துகொள்ள துடிக்கும் பிரிவினை வாதிகளை இன்றும் காணமுடிகிறது.

இப்போதுள்ள நிலையில் காதல் திருமணங்களால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும். ஆனால் படித்த பெற்றோர்களே இதை எதிர்ப்பதால் விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டன. எப்பொழுது பெரியவர்கள் சாதிச்சான்றிதலுக்கு பதில் மருத்துவ சான்றிதழும், வருமான சான்றிதழும் பார்த்து பெண் தருகிறார்களோ அன்று தான் விவாகரத்துகள் குறையும். இப்பொழுது சென்னை போன்ற பெருநகரத்தில் வாழும் பெரும்பான்மையானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. கூட்டுக் குடும்ப வாழ்வைத் தொலைத்து விட்டு, nucleus family என்ற சிறு குடும்ப வாழ்க்கை வாழுகின்றவர்கள். பெரியவர்களின் அன்பும், அறிவுரையும் இல்லாமல் குழந்தை வளர்ப்பை கூட எந்திரத்தனமாக, சுமையாக நினைக்கும் பணம் பண்ணும் மெசின்கள். வருடத்தில் 2 , 3 முறை மட்டுமே ஊருக்கு சென்று சொந்த பந்தத்தோடு நேரம் செலவிடுவர். ஆனாலும் சாதீங்கற நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு அழுகின்றனர்.

எப்பொழுது இந்த நிலை மாறும்???

No comments:

Post a Comment