கடவுள் படைச்சதுலேயே உருப்படியான விசயம் இரண்டு. ஒன்று சரக்கு. இன்னொன்று முறுக்கு. சரக்கு கூட சரியாக அமையாமல் போனால் பிரச்சினையில்லை. ஆனால் கண்டிப்பாக முறுக்கு சரியாக அமைய வேண்டும்.
ஒருநாள் ABC கடைக்கு சென்ற பொழுது வித்தியாசமான ஒரு பெயர் ஈர்த்தது. Smirnoff என்று பாட்டிலில் எழுதியிருந்தது. சிம்ரன் நினைவுக்கு வர சரி அடித்துதான் பார்ப்போமே என்று எடுத்தேன். வீட்டுக்கு வந்து நானும் டீம் மேட்டுடன் சிக்கன் குழம்பு,சிக்கன் பிரை தயார் செய்தோம். சமையல் தயார் ஆனதும் சரக்கை எடுத்து வைத்து அமர்ந்தோம். முதல் ரவுண்டிலேயே ஏதோ வித்தியாசமாக தெரிந்தது. ரெண்டாவது ரவுண்டிலாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். மூன்றாவது,நாலாவது அதன் பிறகு எத்தனை ரவுண்டு என்று கணக்கு தெரியவில்லை. அரைமணிநேரம் சென்றிருக்கும். தொண்டையெல்லாம் எரிச்சல். குமட்டிக்கொண்டு வர தட்டுத் தடுமாறி எழ அடித்த சரக்கு எல்லாம் அப்படியே வெளிவந்து விட்டது. இத்தனை வருஷ சர்வீசில் இப்படி நடந்தது இல்லையே. அதுவும் பாரின் வந்து பாரின் சரக்கு அடித்து இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது. காலையில் கண்விழித்தபொழுது தலையெல்லாம் செம வலி. சத்தியமா இனி குடிக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். ஒரு வழியாக குளித்துவிட்டு நானும் டீம்மேட்டும் மதியம் சமைக்க மீன் வாங்கி வந்தோம். வாழ்க்கையில் முதன்முறையாக மீன் குழம்பு வைக்கிறேன். மீன் பிரை வேறு..வறுத்த மீன்,சாதம்,மீன் குழம்பை டைனிங் டேபிளில் எடுத்து வைத்து அமர்ந்தோம். எனது டீம்மேட் “விநய் லேசா ஒரு கட்டிங் போடலாமான்னு” என்னை கேட்க, அப்புறம் என்ன…மச்சி ஓப்பன் த பாட்டில்தான். நல்லவேளை இந்தமுறை சிம்ரன் எதுவும் பிரச்சினை தரவில்லை. மீன் குழம்பு+வோட்கா செம பொருத்தம். டிவைனோ டிவைன் என்று இருந்தது.
மீண்டும் சொல்கிறேன். சரக்கு கூட சரியாக அமையாமல் போனால் பிரச்சினையில்லை. ஆனால் கண்டிப்பாக முறுக்கு சரியாக அமைய வேண்டும். முதல் நாள் நாங்கள் சமைத்த சிக்கனில் ஏதோ கோளாறு. ப்ரீசரில் வைத்திருந்து சமைத்தது. அநாவசியமாக நான் சிம்ரன் மேல் சந்தேகப்பட்டு விட்டேன்.
-----------------------
இது இன்னொரு ருசியான மேட்டர். ஜொள் சமாச்சாரம். கடந்த இரண்டு மாதமாக எனது மனைவி அருகில் இல்லாமல் நான் மிகவும் சிரமப்பட்டேன். எனது மனைவி இல்லாத குறையை இவர்கள் தீர்த்து வைத்தார்கள். உடனே இது ஏதோ பலான மேட்டராக்கும் என்று அருண் போல ஜொள் வடிய அலைய வேண்டாம். இவர்கள் என்று குறிப்பிட்டது கீழே இருக்கும் மூன்று இணைய முகவரிகள்.
www.arusuvai.com/tamil/
http://www.samaiyalarai.com/
http://www.tamilcook.com/
எனது ஒட்டு அறுசுவை.காமிற்கு… தமிழ்குக்.காமும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ராஜ்டிவி புகழ் தாமோதரன் சமையல் குறிப்புகள் இங்கு கிடைக்கின்றன. நான் இவரது ரசிகன். வளசரவாக்கத்தில் எங்கள் தெருவில்தான் இவர் கேட்டரிங் ஸ்கூல் வைத்திருந்தார். இரண்டொரு முறை இவரை நேரில் பார்த்துள்ளேன். முன்பை விட இப்பொழுது இரண்டு சுற்று பெருத்துவிட்டார். இவரது ரெசிப்பி முருங்கைக்காய்+ மிளகு + கோழி காம்பினேஷனை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
--------------------------
கடந்த இரண்டு மாதங்களில் நான் ருசித்த சரக்குகளின் பட்டியல்
budweiser
corona
elephant
sapporo
heineken
modelo
absolute vodka
Smirnoff
Chivas Regal
Jack Daniel’s
எனது பேவரைட் sapporo. ஜப்பானிய இறக்குமதி பீர். அடித்தால் ச்சும்மா ஜிவ்வென்று ஏறுகிறது. இரண்டாவது இடம் elephant க்கு.
கடந்த இரண்டு மாதங்களில் பார்த்த திரைப்படங்களின் பட்டியல் (நன்றி:- பாரத்மூவிஸ்.காம்)
1.போடிநாயக்கனூர் கணேசன்
2.சாம் ஆண்டர்சன் மிரட்டும் “யாருக்கு யாரோ ஸ்டெப் நீ” (இரண்டாவது முறை)
3.பெப்சி விஜயன் மகன் சபரீஷ் நடித்த(!?) “மார்க்கண்டேயன்”
4.கனல் கண்ணன் ஹீரோ in சங்கரன்கோவில்
5.சடகோபன் ரமேஷ் விளையாடிய “போட்டா போட்டி 50:50″ (இன்னொரு லகானாம்)
6.ஆர்கே என்னும் கலைஞன் வாழ்ந்த “புலிவேஷம்” (அய்யோ…அய்யோ..எனக்கு வேணும்.. எனக்கு வேணும்)
கடந்த இரண்டு மாதங்களில் படித்த புத்தகங்களின் பட்டியல் …. …. வேண்டாம் நம்பவா போகின்றீர்கள்?
---------------------------------------
நானும் எங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் வரலாம்…

No comments:
Post a Comment