Wednesday, June 3, 2009

டமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்

நம்ம பையன் ஒருத்தன் கல்யாணம் செய்து கஷ்டபடுகிறான் டிப்ஸ் கொடுக்கலாம் என்று அவனிடம் போன் போட்டு ஏலேய் இன்னைக்கு உனக்காக உருப்படியான ஒரு விசயம் பிளாக்கில் படிச்சேன் டா?

பிளாக்கிலா? ன்னு நக்கலாக கேட்டான்?


நான் சொல்வதால் அவன் நம்பவில்லை அவனிடம் எலேய் உன் மனைவி மனதை கவருவது எப்படின்னு உனக்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன் அது போல் செய் எல்லாம் சரி ஆகிடும் என்றேன். அரை குறையான மனதோடு மண்டையை ஆட்டினான். அவனிடம் சொன்ன முதல் டிப்ஸ்

டிப்ஸ் -1:ஒரு மனைவி தான் பேசும் போது'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

இத அவனிடம் சொன்னேன் அவனும் ஆமான் டா நான் பாட்டுக்கு எப்ப பார்த்தாலும் லேப் டாப் தட்டிக்கிட்டே உம் போடுவேன் திட்டிட்டு போய் விடுவா, நீ சொல்வதிலும் உண்மை இருக்கு அது போலவே செய்துவிடுகிறேன் என்றான்.

ஒரு 2 மணி நேரம் கழித்து போன், மச்சான் என் கை ஒடிஞ்சு போன மாதிரி வலிக்குது டா வந்து ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போடான்னு சொன்னான் என்னா விசயம் என்று விசாரிச்சா?

இனி ஓவர் டூ ஹோம்:

மனைவி: என்னங்க?

நண்பன்: உம் (சொன்னபிறகு நான் சொன்னது நினைவுக்கு வர லேப் டாப்பை மூடி விட்டு) என்னம்மா?

மனைவி: ஊரில் எங்க அப்பா பாத்ரூமில் குளிக்கும் பொழுது....

நண்பன்: ஓ! அப்படியா?

மனைவி: என்ன அப்படியா எங்க அப்பா குளிக்க மாட்டாரா? ரொம்ப ஆச்சர்யமா கேட்குறீங்க? கீழே விழுந்து கையை முறிச்சிக்கிட்டாராம்.

நண்பன்: (ரெண்டாவதா என்ன சொல்ல சொல்லி இருக்கான் .ம்ம்ம்ம்ம்)ஆஹா!இப்படியா?

மனைவி: இல்ல எப்படின்னு நான் காட்டுறேன்...

இதான் டா நடந்துச்சு என்றான் :)

டிப்ஸ்-2
பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரணம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி 'சர்பிரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள். மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

இதை சொன்னேன் செஞ்சிட்டா போச்சு என்று குஜாலா சென்றான்.
கொஞ்ச நேரத்தில் போன், மச்சான் நீ என் நண்பனா? எதிரியா? ஏன் இப்படி அடி வாங்க விடுகிறாய் என்றான்.

இனி ஓவர் டூ ஹோம்:

நண்பன்: டோன் டொடடய்ங் (சமையல் வேலையாக இருக்கும் மனைவியிடம்) மீயுசிக்கோடு உள்ளே போய் இருக்கான்.

மனைவி: என்ன மீயுசிக் எல்லாம் பலமாக இருக்கு!

நண்பன்: என் கையில் என்ன இருக்கு கண்டுபிடி என்று (பின்னாடி கையை ஒளிய வெச்சிட்டு).

மனைவி: விளையாடாம சொல்லுங்க.

நண்பன்: திரும்ப மியூசிக்கோடு டன் டடன் என்று பின்னாடி ஓளிய வெச்சு இருந்த புடவையை காட்ட..

மனைவி: என்ன இது?

நண்பன்: புடவை

மனைவி: அது தெரியுது! பீரோவில் மடிச்சி வெச்சிருந்த புடவையை ஏன் இப்ப எடுத்து வந்தீங்க?

நண்பன்: நான் சொன்னதை சொல்ல............அம்மான்னு அவன் கத்தும் சவுண்ட் உங்க காதில் விழுதா?

டிப்ஸ்-3: செயற்கைத்தனமாக, மற்றும் ஒப்புக்காக வர்ணிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்ணியுங்கள்..

மனைவி: என்னங்க இந்த மேக்கபில் எப்படி இருக்கேன்.?

நண்பன்: பொய் சொன்னா எளிதில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்று சொல்லி இருக்கான்... சோ உண்மையாகவே வர்ணித்துவிடலாம்.
உனக்கு என்னம்மா பவுடர் பூசின பன்னி குட்டி மாதிரி இருக்க...
நண்பன்:....................

மச்சான் என்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருக்காங்க வாடா துணைக்கு.

டேய் இருடா இன்னும் மூணு டிப்ஸ் இருக்கு என்று நான் சொன்னதும் போனை கட் செஞ்சுட்டான் அதன் பிறகு போன் செஞ்சாலும் சுவிச் ஆப் என்று வருது...

1 comment: