Monday, June 29, 2009

ஐயோ முடியலெ!!

ரொம்ப நாளாக எஃப். எம்முக்கு கால் செய்து மொக்கை போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக் ஷனில் இறங்கிய பாலாஜி லைனை போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.

RJ: ஹலோ சூரியன் எஃப். எம்
ஏழு: ஒழுங்கா சொல்லுங்க ஹலோ எஃப். எம்மா சூரியன் எஃப். எம்மா?
RJ: சூரியன் எஃப். எம் தாங்க
ஏழு: அப்படியா நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சுட்டு இருந்தேன்?
RJ: கடிக்காதிங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.
ஏழு: ரேடியோவ எங்க வேணும்னாலும் துக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சிங்க
RJ: சூப்பர் கேள்விங்க நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்லறேன்.
ஏழு: அவங்களையே டி போட்டு சொல்லறிங்க மரியாதையே இல்லையா?
RJ: வழக்கமா நாங்க தான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேலே கேள்வி கேட்கறிங்க?
ஏழு: நீங்க தானே கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்கன்னு சொல்லறிங்க?
RJ: முடியலே சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?
ஏழு: மலை ஏழுமலை... போனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.
RJ: ஓகே சார், போட்டி விதிமுறை எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒண்ணு பாடுங்க
ஏழு: மெட்டு போடு.. மெட்டு போடு.. ஏன் தாய் கொடுத்த தமிழுக்கு இல்லை தட்டுபாடு.
RJ: சார், டூயட் பட பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.
ஏழு: புறா கூடு போல முப்பது ரூமு...
RJ: ஓகே சார், உங்க வழிக்கே வரேன். இந்த பாட்டை யார் பாடினாங்க?
ஏழு: நான் தாங்க பாடினேன். ஏன் நல்லா இல்லையா?
RJ: ஸ்ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடணும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.
ஏழு: சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.
RJ: இல்ல சார், இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.
ஏழு: என்னங்க நீங்க. எஸ்.பி.பி, ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒண்ணும் சொல்ல மாட்டங்க.
RJ: அப்படி இல்ல சார், ஒருத்தர் பாடியதே இன்னொருத்தர் பாட கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

ஏழு: அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்டர் பாடின பாட்ட பாட சொன்னிங்க?
RJ: ஓகே சார், மொத ரவுண்டு முடிஞ்சது.
ஏழு: அது எப்படி உங்களுக்கு தெரியும்?
RJ: சார். நான் போட்டில முதல் ரவுண்டு முடிஞ்சதுனு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?
ஏழு: நான் ரெடி.
RJ: உங்களுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் பிளேயர் யாரு?
ஏழு: மந்திரா
RJ: மந்திரா பேடியா?
ஏழு: அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க பார்த்தா பொண்ணு மாதிரித்தான் தெரியுது.
RJ: சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமண்டேட்டேர். கிரவுண்டிலே ஆடறதுலே யார புடிக்கும்?
ஏழு: கேத்ரினா கைப். அவங்க ஐ.பி.எல். பைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பாக்கலயா?
RJ: சார். ரொம்ப மொக்கை போடறிங்க பரிசு வேணுமா வேண்டாமா?
ஏழு: என்ன ரொம்ப மிரட்டறிங்க? நீங்க கொடுக்கிற மொக்கை பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லணும்.
RJ: ஓகே சார், தோனியின் சொந்த ஊர் எது?
ஏழு: அடப்பாவி ஒரு ஊரையே சொந்தமா வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?
RJ: பதில் சொல்லுங்க சார். தெரியலனா கட் பண்ணுங்க.
ஏழு: ராஞ்சி (ஆறு சொல்லி குடுக்கறான்)
RJ: யாரு சார் பக்கத்துலே?
ஏழு: ஆறு
RJ: அதான் உங்களுக்கு பதில் சொல்லி தந்தாரே அவரு.
ஏழு: அதான் ஆறு.
RJ: ஒ! ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா?
ஏழு: ஆமாம். நயந்தாரா ஏங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.
RJ: அடுத்த ரவுண்டு ஜி.கே.
ஏழு: B.K. தெரியும் அது என்ன G.K
RJ: சார். ஜெனரல் நாலேட்ஜ்.
ஏழு: அப்படி ஒரு சரக்கா?
RJ: டொக்
ஏழுவின் நிலையை லேட்டாக புரிந்து கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்.

4 comments:

  1. Yennakenamo sathishthan(7) fm ku phone pannipesirumpannu thonuthu.Appo 6 6(aru)?

    ReplyDelete
  2. ஹாஹா அருமைங்கோ!!!

    ReplyDelete
  3. வணக்கம் தலைவா..

    இந்த பதிவின் ஒரிஜினலை எழுதிய அபாக்கியசாலி நான் தான் :)

    ReplyDelete